மிக்ஜாம் புயலால் 6,670 வழக்குகள் ரத்து: சென்னை டிராபிக் போலீஸ் அறிவிப்பு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 03.12.2023 முதல் 08.12.2023 வரை, வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினைக் கருத்தில் கொண்டு, இந்த ஒரு முறை மட்டும் மேற்படி தேதிகளில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படும் என சென்னை நகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment