விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (02.12.2023) மயிலாப்பூர், காரணீஸ்வரர் பக்கோடா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி அடுக்குமாடி குடியிருப்பில் சோதனைகள் மேற்கொண்டு, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ராயப்பேட்டை சாந்தி, 50 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. , மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார்.
பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஆர்ஏ புரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஜெயக்குமார் (36), அவரது மனைவி மஞ்சுளா (34) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (02.12.2023) வளசரவாக்கம், கைக்கான் குப்பம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்து, அங்கு பாலியல் தொழில் நடத்திய வளசரவாக்கம் இந்திரா (37), சைதாப்பேட்டை வெங்கடேஷ் (25) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 5 நபர்களும் இன்று (03.12.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.