சென்னை எம்.கே.பி நகர் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

  சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்ஷெட் ரோடு உட்புறம் முள்காடு பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்த பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் குழுவினர் விசாரணையில் இறந்த நபர் மாத்­தூரைச் சேர்ந்­தவர் என்றும் அவர் பெயர் நவீன்குமார் (எ) அப்பு, (27) என்­பதும் தெரிவந்­தது.
இது குறித்து நவீன்குமார் (எ) அப்புவின் தந்தை ராஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.  புளி­யந்­தோப்பு துணை ஆணையர் ஈஸ்­வரன் மேற்­பார்­வையில் தனிப்­படை போலீசார் நடத்­திய விசா­ர­ணையில் இந்த கொலையை வியா­சர்­பா­டியைச் சேர்ந்த குமரேசன், (38), அங்கப்பன், 30, தமீமுல் அன்சாரி (32) ஆகிய மூவரை கைது செய்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட நவீன்குமார் (எ) அப்பு தனது நண்பரான    குமரேசனுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நவீன்குமார் (எ) அப்பு, குமரேசனிடம் மதுஅருந்த பணம் கேட்டுள்ளார். குமரசேன் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த நவீன்குமார் (எ) அப்பு, குமரேசனின் மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் கடந்த 22.04.2024 அன்று இரவு தனது நண்பர்களான அங்கப்பன் மற்றும் தமீமுல் அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு மேற்படி நவீன்குமார் (எ) அப்புவை மது குடிக்க வரவழைத்து மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (23.04.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Comments (0)
Add Comment