3 பிர­பல ரவு­டிகள் சென்­னைக்குள் நுழைய தடை * காவல் ஆணையர் அருண் உத்­த­ர­வு

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 3 வர­லாற்றுப் பதி­வேடு ரவு­டிகள் சென்னை சரக எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை பெரு­ந­கர காவல் ஆணையர் அரு­ண் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய ரவு­டி­களை கண்டறிந்து அவர்கள் மீண்டும் இதுபோன்ற கொடுஞ் செயல்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் பல்­வேறு உத்­த­ர­வு­களை பிறப்­பித்­துள்­ளார். இந்த வகையில் பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய மற்றும் தங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டக்கூடிய வரலாற்று பதிவேடு உடைய ரவு­டி­க­ளாக பிர­பல ரவு­டிகள் பி.லெனின், நெடுங்குன்றம் சூர்யா மற்றும் ஜெ.ராஜா (எ) ராக்கெட் ராஜா ஆகிய 3 பேர் மீது இன்று (25.04.2025) சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51 A-ன் படி வெளியேற்றுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பி. லெனின் மீது 6 கொலை வழக்குகள், 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 குற்ற வழக்குகள் உள்­ளன. நெடுங்குன்றம் சூர்யா மீது 5 கொலை வழக்குகள், 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 64 குற்ற வழக்குகள் உள்­ளன. ஜெ. ராஜா (எ) ராக்கெட் ராஜா என்பவர் மீது 5 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20 குற்ற வழக்குகள் உள்­ளன.

இதன் மூலமாக மேற்கண்ட ரவு­டிகள் சென்னை பெரு நகர காவல் நிலைய எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ இல்லாமல் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் நுழைவது இன்றிலிருந்து அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் ரவு­டிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment