பீர்க்­கங்­கரணை வாலிபர் கொலையில் 3 பேர் கைது: தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம் நட­வ­டிக்­கை

தாம்பரம் காவல் ஆணை­யரக எல்­லைக்­குட்­பட்ட பீர்க்கன்கரணை, வர­த­ரா­ஜ­பு­ரத்தைச் சேர்ந்­தவர் விக்னேஷ் என்கிற விக்­கி. இவர் முடிச்சூர் CSI சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 10.30 மணிக்கு போலீ­சுக்கு தகவல் கிடைத்­தது. பீர்க்­கங்­கரணை போலீசார் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று உடலை கைப்­பற்றி குரோம்­பேட்டை அரசு ஆஸ்­பத்­­தி­ரிக்கு அனுப்பி வைத்­த­னர்.

விக்னேஷ் என்கிற விக்­கி

தாம்­பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து பீர்க்­கங்­க­­ரணை போலீசார் விசா­ர­ணையை நடத்­தினர். அப்­போது விக்­னேஷ் கொலைக்­கான காரணம் தெரி­ய­வந்­த­து. மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியில் அமர்ந்திருந்த சந்தோஸ் என்ற நப­ரிடம், அதே பகுதியைச் சேர்ந்த சூரியகாந்தி என்பவர் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என கேட்டு செல்போனை பறித்து சென்றுள்ளார். பின்னர் சந்தோஸின் அம்மா சூரியகாந்தியிடம் பேசி செல்போனை வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களிடம், சூரியகாந்தி தன்னிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற விஷ­யத்­தை கூறியுள்ளார்.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த விக்னேஷ் உள்­பட நண்பர்கள் 10 பேர் சேர்ந்து இரவு 10.30 மணிக்கு சூரியகாந்தியின் அண்ணன் ராஜீவ் காந்தி மற்றும் அவரது உறவினர்களை வெட்டி தக­ராறில் ஈடு­பட்­டுள்­ளனர். அப்­போது அங்கு வந்த சூரி­ய­காந்தி, தன் சகோதரரை வெட்டிய நபர்களை கத்­தியால் வெட்­டி­ய­படி விரட்­டி­­யுள்ளார். இத­னால் சந்தோஸின் நண்பர்கள் சிதறி ஓடி விட்டனர். விக்கி (எ) விக்னேஷ் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டார். அவரை விரட்டி சென்று பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் சூரி­ய­காந்­தி வெட்டி­யுள்­ளார். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் போன்ற விவ­ரங்கள் தெரி­ய­வந்­த­ன.

அத­னை­ய­டுத்து தனிப்­படை போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக சூரியா (எ) சூரியகாந்தி, அமோஸ் மற்றும் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் விசா­ர­ணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு சிறையில் அடைக்கப்­பட்­டனர். தலைமறைவான குற்றவாளிகளை போலீ­சார் தேடிவருகின்றனர்.

Comments (0)
Add Comment