செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2,60,000 -லட்சம் மதிப்பிலான 2,808 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை தமிழக அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
மகேஷ்குமார் அகர்வால், IPS., ஏடிஜிபி, குற்றம் மற்றும் அமலாக்கப்பிரிவு
தமிழகத்திற்கு பிற மாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு காவல்துறை ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ராதிகா, IPS., ஐஜி, அமலாக்கப்பிரிவு
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பாண்டிச்சேரி அரசு மதுபானம் கடத்தப்படுவதாக கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் அமலாக்கப்பிரிவு ஐஜி ராதிகா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் செங்கல்பட்டு, புதுப்பட்டு செக்போஸ்ட் அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, புதுப்பட்டு செக்போஸ்ட்டில் வந்த ஸ்கார்பியோ காரை மடக்கி சோதனை செய்த போது அதற்குள் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
அவற்றை கடத்தி வந்த செங்கல்பட்டு, செய்யூர், சிறுநகரைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 38) என்பவரை கைது செய்தனர். காரில் இருந்த 2,808 மதுபாட்டில்கள் மற்றும் கடத்திவரப்பயன்படுத்தப்பட்டTN 22 CC1011 என்ற பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது போன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை எண்.10581 அல்லது CUG No. 949841 0581-னை தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.