சென்னை நகரில் 2,744 பேர் கைது: போதைப்­பொருள்(ANIU) தடுப்­புப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (ANIU) காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 108 செயற்கை போதைபொருள் வழக்குகள் உட்பட 1,044 போதை பொருள் வழக்குகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­து. 22 வெளி நாட்டவர், 80 வெளி மாநிலத்தவர் உட்பட 2,774 நபர்கள் கை­தா­கி­யுள்­ள­னர்.

“சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (Anti-Narcotics Intelligence Unit – ANIU) தனிப்படை 05.08.2024 அன்று உருவாக்கப்பட்டது. இப்பிரிவில் ஒரு உதவி ஆணையாளர், 2 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30 காவல் ஆளிநர்கள் பணியாற்றுகின்றனர்.

சென்னை பெருநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருட்கள் (Synthetic Drugs) தொடர்பான தகவல்களை சேகரித்து தகவலாளிகளை உருவாக்கி, போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் செயற்கை போதைப்பொருள் வலையமைப்பை (Network) கண்டறிந்து இவ்வலையமைப்பின் முன் மற்றும் பின் தொடர்புகளை விசாரித்து போதைப்பொருள் குற்றவாளிகளை 360° கோணத்தில் கண்காணித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கியதன் விளைவாக கடந்த 8 மாதங்களில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 1,044 போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குறிப்பாக 25 Commercial Quantity வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 824 கஞ்சா வழக்குகளில் 1215.53 கிலோ கிராம் கஞ்சா, 112 மாத்திரை வழக்குகளில் 51,229 மாத்திரைகள் (Tydol & Nitravet) கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 108 செயற்கை போதைப் பொருள் வழக்குகள் உள்ளடக்கம் ஆகும் . மேற்படி வழக்குகளில் மொத்தம் 2,774 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

108 செயற்கை போதைப்பொருள் வழக்குகளில் 464 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 71 செயற்கை போதைப்பொருள் வலையமைப்புகள் (Network) அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 548 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 431 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் குறிப்பாக பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களில் பதுங்கி இருந்து சென்னையில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 20 நைஜீரியர்கள், 1 கேமரூன், 1 சூடான் என மொத்தம் 22 வெளிநாட்டவர்களும், வெளி மாநிலங்களான அசாம், கர்நாடகா, ஒரிசா, திரிபுரா, மும்பை மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 8 பெண்கள் உட்பட 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவின் (ANIU) தொடர் முயற்சி மற்றும் தீவிர கண்காணிப்பின் காரணமாக M-1 மாதவரம் காவல் நிலைய குற்ற எண் 1176/2024 என்ற வழக்கில் 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு, 17 கிலோ மெத்தம்பெட்டமைன் என்னும் போதைப்பொருளை பறிமுதல் செய்து அதன் தொடர்ச்சியாக அருப்புக்கோட்டையில் இயங்கி வந்த மெத்தபெட்டமைன் தயார் செய்யும் ஆய்வகம் கண்டறிந்து அழிக்கப்பட்டது.

P-6 கொடுங்கையூர் காவல் நிலைய நிலைய குற்ற எண் 748/2024 என்ற வழக்கில் 9 எதிரிகள் கைது செய்து 245 கிராம் மெத்தபெட்டமைன் என்னும் போதைப்பொருளை பறிமுதல் செய்து அதன் தொடர்ச்சியாக மெத்தபெட்டமைன் தயார் செய்ய கல்லூரி மாணவர்கள் நடத்தி வந்த ஆய்வகம் கண்டறிந்து அழிக்கப்பட்டது.

K-8 அரும்பாக்கம் காவல் நிலைய நிலைய குற்ற எண் 613/24 என்ற வழக்கில் 7 எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 39 கிலோ கேட்டமைன், 1.3 கிலோ மெத்தபெட்டமைன், Rs. 51,00,000/-, 5 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 79 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா என்பவர் இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கும்பல் கஞ்சி பாணி இம்ரான் மற்றும் சின்னா ஆகியோருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சினிமா துறையில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக ANIU தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் படி போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்த துணைநடிகை எஸ்தர் (எ) மீனாவை D-2 அண்ணா சாலை காவல் நிலைய குற்ற எண் 205/2024 என்ற வழக்கில் கைது செய்து அவரிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு சென்னையில் Synthetic போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த சர்வதேச போதைப்பொருள் கும்பலை சேர்ந்த நைஜீரியா, கேமரூன் மற்றும் சூடான் நாட்டினை சேர்ந்த 22 வெளிநாட்டவர்களை கைது செய்து வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை திருச்சி சிறப்பு முகாமில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (நீதிமன்ற பிணையில் வெளியே வந்த 3 வெளிநாட்டவர்களை திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.)

குறிப்பாக பதிவுசெய்யப்பட்ட 108 Synthetic Drug வழக்குகளில்: 21.9 கிலோ (21,940.92 கிராம்) மெத்தபெட்டமைன், 1.06 கிலோ (1,068 கிராம்) மெத்தகுலோன், 39.01 கிலோ (39,012 கிராம்) கேட்டமைன், 213.28 கிராம் ஹெராயின், 67.14 கிராம் கொக்கைன், 156 LSD Stamp, 402 MDMA மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும் Synthetic Drug வழக்குகளில் 90 செல்போன்கள், 12 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள், ரூபாய் 51 இலட்சம் ரொக்கம், 1 மடிக்கணி மற்றும் 63.6 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2024) போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட 300 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை (Goondas) பிறப்பிக்கப்பட்டது. நடப்பு 2025ம்ஆண்டு மார்ச் மாதம் வரை 52 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை (Goondas) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தீவிர முயற்சியால் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) சென்னை பெருநகரில் போதைப்பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
*****

 

Comments (0)
Add Comment