தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களில் அமலாக்கப்பிரிவு போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 3ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோ தனை நடத்தினர். இதில் ஏராளமான போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 3 ஆம் தேதியன்று திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) முருகவேல் என்ற வரலாற்றுப்பதிவேடு ரவுடியிடமிருந்து திருச்சி மண்டல மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான தனிப்படையினர் 644 (750 மிலி) போலி மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்தனர். முருகன் பெங்களுரிலிருந்து போலி மதுபானபாட்டில்கள் பிளாஸ்டிக் டிரமில் அடைத்து வைத்து Pon Pure Logistics மூலமாக திருச்சி கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
மேலும் 5ஆம் தேதியன்று விருதுநகர் -அருப்புகோட்டை ரோடு, பெரியவள்ளிகுளம், லட்சுமிபதி நகரில் வீரராஜ் என்பவரது வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 264 (750 மிலி) போலி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகரம், வண்ணாரபேட்டை, கம்பராமாயணம் தெருவில் உள்ள வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,026 (750 மிலி) போலி மதுபானபாட்டில்கள் சிக்கின விசாரணையில் கோவாவில் குடியேறிய தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த மாரிராஜன் என்பவர் கர்நாடக மாநிலத்திலிருந்து போலி மதுபானபாட்டில்களை ஏற்பாடு செய்தவர் என்று தெரியவந்தது. அதன் பேரில் அமலாக்கப்பிரிவு போலீசார் பெங்களூரைச் சேர்ந்த கேசவமூர்த்தி (50) என்பவரை கைது செய்தனர்.
போலி மதுபானம் பதுக்கிவைத்திருந்த குடோன் கண்டறியப்பட்டது. மேலும் அங்கிருந்து போலி மதுபானங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டு”for defence service only”என்ற முத்திரை போடப்பட்டு பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைத்து அடைக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாரிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். மேலும் பெங்களுரிலிருந்து கடத்தப்படும் போலி மதுபானபாட்டில்கள் ABT Parcel service மற்றும ‘Pon Pure Logistics மூலமாகதான் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலின் அடைப்படையில் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சங்கரன்கோயில், மார்த்தாண்டம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, போலி மதுபானபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இதே போல கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சங்கரன்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முனியப்பன், முருகன், ஷேக் அப்துல்லா, சங்கரன்கோயில், செல்வராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான மாரிராஜன் என்பவரை மத்திய நுண்ணறிவு பிரிவு, திருச்சி மண்டல தனிப்படை குழுவினர் கோவா மாநிலத்தில் பிடித்து, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் ஒப்படைத்தனர். மாரிராஜன் என்பவரை விசாரனை செய்த பின்னர் 10.09.2024 அன்று சிறையில் அடைத்தனர்.
மாரிராஜன் என்பவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து 2000ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர் என்பதும், இவர் மேல் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சரித்திர பதிவேடு 2014 முதல் உள்ளது என்பது விசாரணையில் தெரியவருகிறது. மேலும் இத்தொடர் நடவடிக்கையில் 14 குற்றவாளிகள் EBCID குழுவினர் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் கடந்த 9 நாட்களில் அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்பார்வையில், ஐஜி மயில்வாகனன், எஸ்பி சியாமளா தேவி தலைமையிலான தனிப்படையினர் இன்ஸ்பெக்டர்கள் ராமன், இளங்கோ, சரவணகுமார் ஆகியோரை டிஜிபி சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.