சென்னை தி.நகர், தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 2 கிலோ 46 கிராம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வரும் நந்தனம் பிரபீர் ஷேக் என்பவர் கடந்த மார்ச் மாதம் 50 சவரன் நகைகளை நண்பர் பாலமுருகனுடன் சேர்ந்து திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதன் பேரில் பிரபீர் ஷேக், பாலமுருகன் இருவரையும் மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபீர் ஷேக் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 2 கிலோ 46 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நகை கடை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.