காவல் உதவி செயலியை இதுவரை 2.79 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் சென்னை நகர கட்டுப்பாட்டு அறை துணைக்கமிஷனர் தீபாசத்யன் தகவல்

‘‘இதுவரை காவல் உதவி செயலி தமிழகம் முமுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பொதுமக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது’’ என சென்னைப் பெருநகர கட்டுப்பாட்டு அறை துணைக்கமிஷனர் டாக்டர் தீபா சத்யன் தெரிவித்தார்.

இன்று சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையா ளர்களை சந்தித்த தீபா சத்யன் கூறியதாவது,

‘‘சென்னை நகர நவீன காவல் கட்டுப்பாட்டு மையம் கடந்த 04.06.2018 அன்று தொடங்கப்பட்டு சென்னை எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. கடந்த 4.4.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த காவல் உதவி செயலியை துவங்கி வைத்தார். ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை பொதுமக்களுக்கு காவல் உதவி செயலி சிறந்த சேவை புரிந்து வருகிறது. இதுவரை காவல் உதவி செயலி தமிழக முமுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பொதுமக்களால் பதிவிறக்கம் செய்துப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 46,174 நபர்களாலும் மற்றும் மாவட்ட அளவில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 15,798 நபர்களாலும் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்து முதலிடத்தில் உள்ளது. 14 தலைப்புகளின் கீழ் 66 அம்சங்களை கொண்டு இயங்கும் இந்த காவல் உதவி செயலி அவசரகால செயலியாகவும் பிற தேவைகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டது. சைபர் குற்ற புகார்களையும் இந்த செயலி மூலம் பதிவு செய்யலாம். 37 மாவட்டங்கள் 9 மேப்பில் இந்ச செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் அவசரகால நண்பனாகவும் உள்ளது. பொது மக்கள் இந்த செயலியை பற்றிய போதிய விழிப்புணர்வு மற்றும் அறிந்திருக்காததால் இந்த காவல் உதவி செயலியை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து இதன் முழு பலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்’’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Comments (0)
Add Comment