1,755 லிட்டர் கோவா போலி மது­பாட்­டில்கள் பறி­மு­தல்: தமிழக அம­லாக்­கப்­ புல­னாய்வு பிரிவு அதி­ர­டி நட­வ­டி­க்­கை

கோவையில் தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு புல­னய்­வுத்­துறை நடத்­திய வாக­ன சோத­னையின் போது கோவாவில் இருந்து கடத்தி வர­ப்­பட்ட 1,755 லிட்டர் போலி மது­பாட்­டில்கள் பறி­முதல் செய்­யப்­பட்­ட­ன.

தமிழ்­நாடு அமலாக்கப்பிரிவு புலனாய்வுத்துறை மாநிலம் முழுவதும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த டிஜிபி சங்­கர்­ஜிவால் உத்­த­ரவின் பேரில் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நேரடி மேற்­பார்­வையில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை மிகவும் உறுதியாக அமல்படுத்தி வருகிறது. போலி மதுபானம் தயாரிப்பு கூடங்கள், சட்ட விரோதமாக மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள், போலி மதுபான வர்த்தகம் பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர் கண்காணிப்பு மற்றும் வேட்டைகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் இரண்டு போலி மதுபான ஆலைகள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்­தினம் கோவை சிஐயூ (CIU) ஆய்வாளர் தலைமையிலான தனிப்­ப­டை­யினர் திருப்பூர், செடப்பாளையம் சந்திப்பிற்கு அருகில், பல்லடம் – மங்கலம் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். உள்ளே 2,340 போலி கோவா மதுபான பாட்­­டில்கள் (மொத்தம் 1,755 லிட்டர்) கைப்­பற்­றினர். மேலும் அதனை வழிக்காவல் செய்த டாடா இன்டிகா காரும் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் போலி மதுபானங்கள் கோவாவில் கிருஷ்­ண­கிரி, சேலம் வழி­யாக கடத்தப்பட்டு வந்­த­து தெரிய­வந்­­துள்­ளது. இந்த கடத்­தலின் முக்­கிய மூளையாக செயல்பட்ட நபரை போலீசார் அடையாளம் கண்­டுள்­ளனர். மதுபானத்தை கடத்த உதவிய லாரி டிரைவர் மற்றும் டாடா இன்­டிகா காரில் வந்த இருவர் உள்­பட 3 பேரை போலீசார் கைது செய்­த­னர்.

பொது மக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தக தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 அல்லது CUG எண்.9498410581 என்ற எண்ணிற்கு தகவல் வழங்கலாம். வழங்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என அம­லாக்­கப்­ப­ணி­யக புல­னாய்­வுப்­பி­ரிவு கேட்டுக் கொண்­டுள்­ள­து.

Comments (0)
Add Comment