சென்­னையில் 7 நாள் ரெய்டில் 149 கிலோ குட்கா, மாவா பறி­­மு­தல்: 84 பேர் கைது 

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், சென்னை நகரில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்­யப்ட்­டுள்­ளனர். 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 71.4 கிலோ மாவா ஆகி­ய­வற்றை போலீசார் பறிமுதல் செய்­துள்­ளனர்.

 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 26.02.2024 முதல் 03.03.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள்,  71.4  கிலோ மாவா, 1 செல்போன், பணம் ரூ.13,900/-, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 03.03.2024 வரை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 14 குற்றவாளிகள் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Comments (0)
Add Comment