ஆவடி பகுதியில் டீக்கடையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் ஆவடி மார்கெட் பகுதியில் உள்ள வசந்த் டீ ஸ்டாலில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் டீக்கடைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. டீக் கடை உரிமையாளர் இது போன்று தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வசந்த் டீ கடையை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் எச்சரித்துள்ளார்.