பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் நடத்திய விழிப்புணர்வு போட்டி
பரிசு வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சாலைப் பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை
மேம்படுத்தவும், அது பற்றிய அவர்களின் அறிவை மதிப்பிடவும், சென்னை
நகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்
அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் ஆர். சுதாகர் வழிகாட்டுதலின் பேரில்,
மாதிரி தயாரிப்பு போட்டி அறிவிக்கப்பட்டது. . போக்குவரத்து தொடர்பான மாதிரிகள்
தயாரிக்கும் போட்டி இன்று (20.01.2024) சென்னை
செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 67 பள்ளிகளைச் சேர்ந்த 248 போக்குவரத்து காவல் துறையின் RSP திட்டத்தில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு
102 மாதிரிகள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டன. மாதிரிகள் பெரும்பாலும்
சித்தரிக்க கருப்பொருளாக இருந்தன.
i) போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல்
i) விபத்து தடுப்பு
ii) ஜீரோ சிக்னல் சந்திப்பு
iv) ஆம்புலன்ஸ் எச்சரிக்கை அமைப்பு
v) தொழில்நுட்ப போக்குவரத்து மேலாண்மை முறை ஆகியன தொடர்பாக
சிறந்த 3 மாடல்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசுக்கு (DAV பள்ளி, ஆதம்பாக்கம்)
ரூ.50.000/- ரொக்கப்பரிசும், இரண்டாம் பரிசு (ஸ்ரீ பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின்
வித்யாலயா மெட்ரிக் பள்ளி. சவுகார்பேட்டை) ரூ.25.000/- ம் மற்றும் 3வது பரிசு (அரசு
பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர்) ரூ.10,000/-ம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை இணை ஆணையர்கள், போக்குவரத்து மற்றும்
துணை ஆணையாளர் கிழக்கு மற்றும் வடக்கு போக்குவரத்து காவல் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.