சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 39 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த வேப்பேரி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில் G-2 பெரியமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துபாண்டியன், தலைமைக் காவலர்கள் சந்திரன், வீதிவிடங்கன், தமிழரசன், புழல் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சண்முகம், மணி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரசேகர், தலைமைக் காவலர்கள் குப்புசாமி, எம்ரோஸ், சிவக்குமார், முதல் நிலைக் காவலர்கள் கோபாலகிருஷ்ணன், யுவராஜ், காவலர் அரங்கநாதன், சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு (SCP) காவல் ஆய்வாளர் கீதா, தலைமையில் உதவி ஆய்வாளர் விஜயா, காவலர் ரபின், குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமாலா தலைமையில் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், தலைமைக் காவலர் புருஷோத்தமன், முதல் நிலைக்காவலர்கள் ராஜ்குமார், கோதண்டராமன் , யானைக்கவுனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் பொன்பாண்டியன், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார், சுகுமார் ஆகியோர் இன்று சிறந்த காவல் பணியாற்றியதற்காக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் பாராட்டு பெற்றனர்.
மேலும் மதுரவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகராஜன், சுப்பிரமணியன் தலைமையில் தலைமைக் காவலர்கள் கேசவன், வெங்கடேசன், முதல் நிலைக்காவலர் தசரதன், சதாம் உசேன், மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய தலைமைக்காவலர் ஞானமணி தலைமையில் முதல் நிலைக்காவலர் கார்த்திகேயன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக்காவலர் ஆறுமுகநயினார், விரல்ரேகை பிரிவு (Finger Print Bureau) கூடுதல் துணை கண்காணிப்பாளர் கலைகண்ணகி தலைமையில், விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் முரளி, சுதாகரன், சுதர்சன், பணியிடை பயிற்சி மைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோமதி என மொத்தம் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (விரல்ரேகை பிரிவு), 1 உதவி ஆணையாளர், 3 காவல் ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 22 காவல் ஆளிநர்கள், என 39 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (12.08.2023) நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
வேப்பேரி உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கைது செய்தும், புழல் காவல் நிலைய குழுவினர் சங்கிலி பறிப்பு திருடர்களை இராஜஸ்தான் மாநிலம் சென்று கைது செய்தும், சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு (SCP), காவல் குழுவினர், ITC கிராண்ட் சோழா ஓட்டலில் G-20 மாநாடு பாதுகாப்பு பணியின்போது, போலியான அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரை பிடித்து ஒப்படைத்தும் சிறந்த பணியாற்றியுள்ளனர்.
மேலும் குமரன் நகர் காவல் நிலைய குழுவினர் வீடு புகுந்து கத்தியைக் காட்டி பணம் மற்றும் தங்க நகைகள் திருடிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்தும், R-1 மாம்பலம் போக்குவரத்து காவல் நிலைய குழுவினர் தி.நகர் பகுதியில் பெண்மணி தவறவிட்ட தங்கநகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தும், C-2 யானைக்கவுனி காவல் நிலைய குழுவினர் செல்போன் பறிப்பு திருடர்களை கைது செய்தும், T-4 மதுரவாயல் காவல் நிலைய குழுவினர் கத்தியால் தாக்கி செல்போன் பறித்துச் சென்ற திருடர்களை கைது செய்தும, N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய குழுவினர் ஒரு நபரை கொலை செய்து செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளியை கைது செய்தும் சிறந்த காவல் பணிபுரிந்துள்ளனர்.
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய முதல்நிலைக் காவலர், கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க நீதிமன்ற அலுவல் பணிகளை மேற்கொண்டும், சென்னை பெருநகர காவல்,விரல்ரேகை பிரிவினர் 2014ம் ஆண்டு J-7 வேளச்சேரி காவல் நிலைய திருட்டு வழக்கில் பெண் குற்றவாளியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்து கைது செய்ய உதவியும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மேற்படி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்ககளை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.