உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற VREON Tech India நிறுவனம்

சென்னை நந்தம்பாக்கம் மையத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 வெளி நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் எம். ராமசுப்பிரமணி, ஐபிஎஸ், (IGP, rtd), இயக்குர், VREON Tech India Pvt Ltd.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா, இந்தியா அபரிமிதமான வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் என்று கூறினார். இதில், ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், வின் பாஸ்ட் உள்ளிட்ட 12 பெரிய நிறுவனங்கள் ரூ.57,354 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

உலக அளவில் புகழ் பெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்தியா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த மாநாட்டில் சென்னையைச் சேர்ந்த Vertual reality and Augmented realityயில் சிறந்து

விளங்கும் பிரபல நிறுவனமான VREON Tech India Pvt Ltd நிறுவனமும் பங்கேற்றது. இந்த நிறுவனத்தின் இயக்குநரும் தமிழக காவல்துறை முன்னாள் போலீஸ் ஐஜியுமான டாக்டர் திரு. ராமசுப்பிரமணி, ஐபிஎஸ், தனது மருமகன் M. Sudar, BE, LLB, அவர்களுடன் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

உலகப்புகழ் பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் கலந்து கொண்டது பெருமை மிக்க நிகழ்வாக அமைந்துள்ளது. மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்பட தமிழகம்

முழுவதிலும் உள்ள பல்வேறு பிரமாண்ட கட்டடங்களின் அமைப்பு மாதிரிகளை போலீஸ் ஐஜி டாக்டர் ராமசுப்பிரமணி அவர்களது VREON Tech India Pvt Ltd நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/watch?v=hZwGeyw2tus

 

 

Comments (0)
Add Comment