104 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமிகள் இருவர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று 19.-02.-2024 மதியம் ௨ மணியளவில் கூடுவாஞ்சேரி மகேந்திரா சிட்டி அருகே சிலர் கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மகேந்திரா சிட்டி சந்திப்பில் தனிப்படையினர் சோதனை நடத்தினர்.

அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு நபர்களை விசாரணை செய்ததில் ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்த பட்டு குளோரி (40), மற்றொருவர் அக்ரம் பத்ரா (28) என்பது தெரியவந்தது. பின்பு அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் அதில் ரூபாய் ௧௦ லட்சத்து நாற்பதாயிரம் மதிப்புள்ள 104 கிலோ கஞ்சா இருந்தது. அவர்கள் அந்த கஞ்சாவினை ஒடிசா மாநிலத்திலிருந்து வாங்கி வந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கு எடுத்துசெல்வதாக கூறியதை தொடர்ந்து அவர்களை கைது அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கைப்பற்றப்பட்டது. இது சம்மந்தமாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.

 

Comments (0)
Add Comment