சாலை விபத்து பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி: டிஐஜி முத்துசாமி துவங்கி வைத்தார்

சாலை விபத்துக்களில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களை போக்குவரத்து காவலர்கள் நேரில் சந்தித்து, சாலை விபத்துகளின் பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு பயிற்சி – வேலூர் சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியின் Physical Medicine and Rehabilitation துறை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

நான்கு கட்டமாக நடைபெறும் இந்தப் பயிற்சியின் தெடக்க விழா இன்று (01.08.2023) பாகாயம் புனர்வாழ்வு மையத்தில் (Physical Medicine and Rehabilitation center) நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு காவல் பயிற்சியினை, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி துவங்கி வைத்தார். வேலூர் எஸ்பி மணிவண்னன் முன்னிலை வகித்தார். CMC வேலுார் PMR துறை பேராசிரியர் மற்றும் தலைவர் Dr. ஜேக்கப் ஜார்ஜ், PMR துறை பேராசிரியர் Dr. ஜீடி ஆன் ஜான், மற்றும் பயிற்சியாளர் Dr. குரு நாகராஜன் MSW Ph.D, (WHO Certified Trainer) ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி வகுப்பில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து உரையாடிய நிகழ்வு. போக்குவரத்து காவலர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Comments (0)
Add Comment