சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 பலே திருடர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, ராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர், ஜெயக்குமார் (34). ஏ.சி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். ஜெயக்குமார் தனது வீட்டின் வெளியே பழைய ஏ.சி இயந்திரங்களின் காப்பர் காயில்களை போட்டு வைப்பது வழக்கம். கடந்த 11.04.2023 அன்று ஜெயக்குமாரின் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஏ.சி இயந்திரங்களின் காப்பர் காயில்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் ராயலாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ்கண்ணன் மற்றும் அருண் ஆகிய இருவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (18.04.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.