ஆயுதப்படை காவலர்களின் உடற்பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (16.12.2023) காலை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் உடனிருந்தனர்.

Comments (0)
Add Comment