தூத்துக்குடியில் 50 புகார் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

தூத்துக்குடியில் நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில் இன்று வந்த 50 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம், டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடந்து வருகிறது. இன்று 22.11.2023 எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 5 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 45 மனுதாரர்கள் என மொத்தம் 50 மனுதாரர்கள் இன்று குறை தீர் முகாமுக்கு வந்தனர். தங்கள் குறைகளை எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணனிடம் தெரிவித்து புகார் மனு அளித்தனர். குறைகளை கேட்டறிந்த எஸ்பி பாலாஜி சரவணன் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment