தத்து எடுத்து வந்த குழந்­தை திடீரென இறந்து போனதால் ரயில்வே தண்­ட­வா­ளத்தில் போட்டு விட்டுச் சென்ற 6 பேர் கைது

கட­ந்த 14.09.2025-ம் தேதி காலை 9 மணிய­ளவில் சூலூர் ரயில் நிலையத்திற்கும், இருகூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்­ட­வா­ளத்தில் சுமார் 6 மாதம் ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்த­து.

இது குறித்­து போத்தனூர் ரயில் நிலைய மேலாளர் கொடுத்த அளித்த புகாரின்பேரில் போத்தனூர் ரயில்வே போலீசார் விசா­ரணை நடத்­தினர்.

சம்­பவ இடத்தில், தண்டவாளத்தில் இறந்து கிடந்த குழந்­தைக்கு அருகில் கருப்புக்கோழி ஒன்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்­­த­து. மஞ்சள் கலந்த மசால் பொடிகள் அங்கு தூவப்பட்டிருந்­தன. இதனால் குழந்தையின் இறப்பில் போலீ­சா­ருக்கு சந்கேம் ஏற்­பட்­ட­து­. ரயில்வே டி­ஜிபி வன்­னியப் பெருமாள் உத்­த­ரவின் பேரில் டிஐஜி பாபு, எஸ்பி ஈஸ்­வரன் நேரடி கண்காணிப்பில் தீவிர விசா­ரணை நடந்­தது.

கோவை ரயில்வே டிஎஸ்பி பாபு தலைமையில் போத்தனூர் இன்ஸ்­பெக்டர் ருவாந்திகா மற்றும் உதவி ஆய்வாளர்கள் கண்ணன், தர்மராஜ், கங்காதேவி, கார்முகில், ரமேஷ் மற்றும் காவலர்கள் சகிதம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தும், சென்னை ரயில்வே சைபர் பிரிவு தலைமை காவலர் ஜான்பால் உதவியுடன் சந்தேக நபர்களை கண்காணித்தனர். அத­னை­ய­டுத்து இந்த வழக்கில் தொடர்­பு­டையதாக சந்­­தேகம் உள்­ள கோவை சிங்­கா­நல்லூர் மரியலூயிஸ் (47), அவரது மனைவி ராதாமணி (37), கோவை நீலிக்­கோணம் பாளையம் வைசாலி (44) மற்றும் அவ­ரது மகன்கள் அக்சய் (27), பிரவீன் குமார் (29), கிருத்திகா (26) ஆகிய 6 பேருக்கும் சம்மன் அனுப்பி விசா­ரணை நடத்­தினர்

மரியலூயிஸ், ராதாமணி தம்­ப­திக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் குழந்தை பிறக்க வில்லை. இதனால் குழந்தையை தத்தெடுப்பதற்காக வைசாலியுடன், ராதாமணி மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ளார். வைசாலியின் தங்கை மூலம் தெரிந்த ஒரு தம்பதியினரிடம் குழந்தையை பெற்றுக் கொண்­டு கடந்த 13.09.2025-ம் தேதி காலை கோயம்புத்தூர் வந்துள்ளார்கள். ஆனால் குழந்தைக்கு திடீ­ரென உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்­ள­து. இதனால் பயந்து போன அவர்கள் குழந்­தையை ஆள்­ந­ட­மா­ட்டம் இல்­லாத இடத்தில் வீசி விட திட்டம்­போட்­டுள்­ளனர்.

மரியலூயிஸ், ராதாமணி, அக்சய் குமார், பிரவீன்குமார், கிருத்திகா ஆகியோர்கள் சேர்ந்து காரில் ரயில்வே தண்டவாளப்பகுதிக்கு சென்றுள்ளனர். சூலூர் ரயில் நிலையத்திற்கும், இருகூர் இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்­ட­வா­ளத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை வைத்து விட்டு சென்றுள்ள­னர். குழந்தை இறந்தது சனிக்கிழமை என்பதால் சம்பிரதாயப்படி கருப்புக்கோழியை அறுத்து, மஞ்சள் கலந்த மசால் பொடியை தூவியதாகவும் அதிர்ச்சித் தக­வல்­களை தெரி­வித்­த­னர். அத­னைய­டுத்து 6 பேரும் கைது செய்யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ”ஒரு வய­து முதல் 6 வரையிலான குழந்தையை தத்தெடுக்கும் சட்ட நடைமுறைகளை இவர்கள் பின்பற்ற வில்லை. மேலும் குழந்தையை சட்டத்திற்கு புறம்பாக வாங்கியுள்­ளனர். விற்பது குற்றம் என தெரிந்தும், இறந்த குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறைத்து தண்டவாளப் பாதையில் வைத்துள்­ள­னர்.
மேலும் குழந்தையின் இறப்பைப்பற்றிய தகவலை முறைப்படி தெரிவிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக மறைத்துள்­ள­னர். இறந்த குழந்தையின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் அவமரியாதை படுத்தியுள்­ளனர். இ­தனால் அவர்கள் மீது நட­வ­டி­க்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­து.

Comments (0)
Add Comment