கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் போக்சோ சட்டம் குறித்த கருத்தரங்கு:

சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, சென்னை பெருநகர காவல் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.


சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, இன்று (31.08.2023) வேப்பேரி காவல் ஆணையரகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நடந்த இப்பயிற்சி கருத்தரங்கத்தில், சென்னை பெருநகர காவல் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என சுமார் 60 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CWC) எஸ்பி ஜெயஸ்ரீ, தமிழ்நாடு காவல்துறை, சென்னை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் டாக்டர் வனிதா மற்றும் சமூக நல அதிகாரி மங்கையர்க்கரசி, வடசென்னை மாவட்ட சமூக நல பாதுகாப்பு அதிகாரி லதா, அரசு மருத்துவ அதிகாரி கீதாலட்சுமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி, சமூக பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் தனசேகர பாண்டியன், மத்திய ஒருங்கிணைப்பாளர், ஓன் ஸ்டாப் சென்டர் பூங்கொடி ஆகியோர் இப்பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாலியல் துன்பங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளும் போது ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

மேலும், பெண்கள் உதவி எண்.181, பெண்கள் காவல் உதவி எண்.1091, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் எண்.044-28592750 குறித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

 

Comments (0)
Add Comment