சென்னை சிட்­ல­பாக்­கத்தில் ஸ்கூட்டி பெப் திருடன் கைது: 14 இரு­சக்­கர வாக­னங்கள் மீட்­பு: தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம் அதி­ரடி நட­வ­டிக்­கை

தாம்பரம் போலீஸ் கமி­­ஷனர் அபின் தினேஷ் மோடக் உத்­த­ரவின் பேரில் காணாமல் போன இரு சக்கர வாகன திருட்­டுக்­குற்­றங்­களில் ஈடு­படும் நபர்­களை கைது செய்­வ­தற்கு சிட்லப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்­பட்­ட­து. இரு சக்கர வாகன திருட்டுக் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள CCTV கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் TVS Scooty போன்ற வாகனங்களை திருடி கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 27.08.2024 அதிகாலை 05.30 மணியளவில் ஊரப்பாக்கம் சந்திப்பு அருகில் வைத்து இருசக்கர வாகன (TVS Scooty pep ) த்தில் வந்த தேனாம்­பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (60) என்ற நபரை போலீசார் பிடித்து விசா­ரணை நடத்தியதில் சிசி­டி­வியில் இருந்த நபரும் ஹரிஹரனும் ஒரே நபர் என்­பது தெரி­ய­வந்­த­து.

கடந்த இரண்­டரை மாதங்­களில் தாம்பரம் மற்றும் சென்னை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்­பட்ட இடங்­களில் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில் வரையரை செய்யப்பட்ட வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தாமல் பொது இடங்களில் நிறுத்திய வாகனங்களை கள்ள சாவி மூலமாகவும் மற்றும் உயரை துண்டித்து துண்டு உயர் மூலம் இரணப்பு ஏற்படுத்தி பக்கவாட்டு பூட்டை உடைத்து வாகனங்களை திருடியதை ஹரி­ஹரன் ஒப்புக்கொண்டார்.

மேலும் ஹரிஹரன் தொடர்ந்து தான் திருடிய இருசக்கர வாகனங்களை திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி ஆகிய இடத்திற்குச் சென்று கிராம பகுதிகளில் சாதாரண வியாபாரிகளிடமும் பால் வியாபாரிகளிடமும் வாகன எண்ணை மாற்றி குறைந்த விலைக்கு ஏமாற்றி விற்பனை செய்துள்ளார். விற்ற 9 இரண்டு சக்கர வாகனமும் அவர் குடியிருந்த ஊரப்பாக்கம் வாடகை வீட்டின் மேற்கு பக்கம் பதுக்கி வைத்திருந்த 5 வாகனங்களையும் சேர்த்து 14 வாகனங்களை போலீசார் மீட்­ட­னர்.

மேலும் விசா­ர­ணையில் ஹரிஹரன் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக சூளைமேடு, சைதாப்பேட்டை, மாம்பலம், மயிலாப்பூர், சேலையூர், செங்கற்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட TVS Scooty போன்ற இரண்டு வாகனங்களை திருடி சிறைக்கு சென்று வந்தது போலீசார் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­த­து. ­­­வி­சா­ர­ணைக்குப் பிறகு சிட்லபாக்கம் போலீசார் ஹரிக­ரனை தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Comments (0)
Add Comment