சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று மதியம் 1 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சந்தீப்ராய் ரத்தோரை டிஜிபி சங்கர்ஜிவால் வரவேற்றார்.
கமிஷனர் அறைக்குள் சென்று அதற்குறிய கோப்புக்களில் கையெழுத்திட்டு சந்தீப்ராய் ரத்தோர் போலீஸ் கமிஷனர் பதவியை ஏற்றுக் கொண்டார். பொறுப்புக்களை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்த பின்னர் டிஜிபி சங்கர்ஜிவால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சென்னை நகரின் 109வது போலீஸ் கமிஷனராக பதவி ஏற்ற சந்தீப்ராய் ரத்தோர் பின்னர் தனது பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.