வங்­கியில் லோன் வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 60­ லட்சம் மோசடி: ஹரி­நாடார் உள்­பட இருவர் கைது: சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

ரூ. 35 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ. 70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரிகள் இருவரை கைது செய்­து பணம் ரூ. 12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும்  2 Dongle கருவிகளை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் பறிமுதல்  செய்­துள்­ளனர்.
சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த ஆனந்த்குமார். சரக்குகள் ஏற்றி செல்லும் லாஜிஸ்டிக் தொழில் நடத்தி வருகிறார். அந்தத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக கட­னுக்­காக முயற்சி செய்து வந்­துள்ளார். அப்­போது பாலசுப்ரமணியன் (எ) பாலு மூலம்  ஹரி நாடார் மற்றும் சிலரை வாட்ஸ்அப் மூலம் அறி­மு­க­மா­கி­யுள்­ள­னர். அப்­போது ஹரி­நாடார் ரூ. 35 கோடி லோன் பெற்று தருவதாகவும். அதற்கு 2 சதவிகிதம் செயல்முறை கட்டணமாக ரூ. 70 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்­ள­னர்.
அதனை நம்­பிய ஆனந்த்­குமார் 28/08/2025 அன்று ரூ.70 லட்சம் பணத்தை எதிரிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.  அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 35 கோடிக்கான Bank of Baroda வங்கியின் 4 டிடிக்­க­ளை பெற்றுள்ளார். அதில் 3 ­டி­டிக்­களை வங்கியில் செலுத்திய போது, வரைவோலைகள் போலியானவை என தெரி­ய­வந்­தது..தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆனந்த்குமார்  கடந்த 2025ம் ஆண்டு போலீஸ் கமி­ஷனர் அரு­ணிடம் புகார் அளித்­தார்.
அவ­ரது உத்­த­ர­வின் பேரில் மத்திமக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்பேரில், நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-I) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில்  நெல்லையைச் சேர்ந்த ஹரி நாடார் என்பவர் முக்கிய மூளையாக செயல்பட்டு, அவரது கூட்டாளிகளுடன் இணைந்து குளோபல் பைனான்ஸ் கம்பெனி என்ற போலி நிதி நிறுவனத்தை உருவாக்கியது தெரி­ய­வந்­தது, IDFC வங்கியில் பெயரளவில் கணக்கு ஆரம்பித்து, அதன் மூலம் புகார்தாரரர் வசமிருந்து ரூ.70 லட்சத்தை மோசடியாக பெற்றுக்கொண்டு, 4 போலியான வரைவோலைகள் (DD) தயார் செய்து, புகார்தாருக்கு கொடுத்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
அத­னை­ய­டுத்து EDF-I பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இந்த மோச­டியில் ஈடு­பட்ட சேலம், பொன்­னம்மாள் பேட்­டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (58), நெல்லை மண்­ணூரைச் சேர்ந்த ஹரி நாடார் (42), ஆகிய இருவரை 08.01.2026 அன்று முறையே சேலம் மற்றும் திருச்சியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரி நாடார் என்பவரிடமிருந்து பணம் ரூ. 12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும் 2 Dongle கருவிகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர்  (09.01.2026) சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் (CCB & CBCID) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கின் மற்ற தலைமறைவு எதிரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments (0)
Add Comment