போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற 90 நாட்களில் 178 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் பொறுப்பேற்ற 90 நாட்களில் (08.07.2024) ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாளில் பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். அந்த மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவிற்கு வான் தந்தி மற்றும் செல்போன் மூலமாக அறிவுரை கொடுத்து புகார் மனுக்களை அனுப்பி வைத்து அந்த மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
அதன்படி 09.10.2024ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 253 மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவிற்கு அனுப்பி வைத்ததில் இது வரை 178 புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குறைகள் மேற்கொண்டு தகுந்த தீர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கணவன் மனைவி குடும்ப பிரச்சனைகளும் மற்றும் வேலை செய்த இடங்களில் சம்பள பணம் கிடைக்கப் பெறாமல் இருந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் 75 மனுக்கள் மீது அந்தந்த காவல் மாவட்டம் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் தகுந்த நடவடிக்கைக்காக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனுக்களின் மீது தீர்வு காணப்பட்ட புகார் மனுதாரர்களை அவர்களது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவர்களது புகார் மனுவின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதனை கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உறுதி செய்து கொள்ளப்பட்டதாக சென்னை நகர காவல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.