மிக்ஜாம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் நியாய விலைக்கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கமிஷனர் சங்கர் இன்று ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயலில் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6 ஆயிரம் நிவாணம் அறிவித்துள்ளது. அதனை நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் அதிக கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் இன்று 17.12.2023 நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுவதை நேரில் சென்று பாதுகாப்பு மற்றும் ஆயத்த பணிகளை ஆய்வு செய்தார். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் அவற்றை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை கமிஷனர் சங்கர் வழங்கினார்.