தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று (31.01.2024) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு கொடுக்க வந்த 42 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திராவிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த ஏஎஸ்பி பால்சந்திரா உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment