வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக்கோரி துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி செப்டம்பர் 25ம் தேதி
கோவில்பட்டியில் துரை வைகோ தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது

செப்டம்பர் 24 முதல் இயக்கப்படும் நெல்லை –- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு
கோவில் பட்டியில் நிறுத்தம் கோரிய தலைவர் வைகோ கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி,  செப்டம்பர் 25 திங்கள் மாலை 4 மணிக்கு கோவில்பட்டி நகரில், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என மதிமுக செய்தித் தொடர்பாளர் மின்னல் முகமது அலி தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment