பனையூரில் பேஸ்புக் மூலம் வலைவிரித்து ஐடெக் விபசாரம்: 8 பேர் கைது

சென்னை பனையூரில், பேஸ்புக் வலைவிரித்து ஐடெக் முறையில் விபசாரத் தொழிலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பனையூர் பகுதியில் பண்ணை வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் 05.11.2023ம் தேதி மாலை தாம்பரம் மாநகர காவல், விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வளார் மற்றும் காவல் ஆளினர்கள் பனையூர் பகுதியில் தனிக்கை செய்தனர். Face book மூலமாக ஆண்களுக்கு வலைவிரித்து பனையூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடத்தி இளம் பெண்களுடன் சேர்ந்து உல்லாசமாக இருக்க ரூ. 13,000 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று விபசார புரோக்கர்கள் விபசாரத் தொழிலை ஐடெக்காக செய்து வந்தது தெரியவந்தது.

அதனையடுத்து தனிப்படை போலீசார் பனையூர் VGP -NRI Layout சென்னை என்ற இடத்தில் தனிப்படையுடன் சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பண்ணை வீட்டில் 8 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வந்தது உறுதியானது. போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற செந்தில்குமார், குமார், சந்திரமோகன், சங்கர், வேல்ராஜ், செல்வன், பேரரசன், வெங்கடேஷ் குமார் ஆகிய 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த 8 பெண்களை தங்களது மனைவி என்று கூறிய அவர்கள், அந்த பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்ததில் Face Book மூலமாக பல ஆண்களுக்கு வலைவிரிந்து பனையூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு வரவழைத்து பணம் பெற்று விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மேற்படி 8 நபர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனர்.

 

Comments (0)
Add Comment