ஆன்லைன் மூலம் ரூ. 80 லட்சம் மோசடி: மைசூர், பெங்­களூர் ஆசா­மிகள் இருவர் கைது

தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போல குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 80 லட்சம் அபகரித்த வழக்கில் 2 நபர்கள் மைசூர் மற்றும் பெங்களூரில் னர் செய்­யப்­பட்­டுள்­ள­னர். 2 செல்போன்கள் பறிமுதல் செய்­து சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீ­சார் நடவடிக்கை மேற்­கொண்­டுள்­ள­னர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பிரணாதார்த்திஹரன், (59) தனியார் சிமென்ட்ஸ் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் ஒரு புகார் மனு அளித்தார். ‘9675565895 என்ற மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்தச் செய்தியை அனுப்பியவர் நான் பணிபுரியும் நிறுவனத்தின் CEO கிருஷ்ணமூர்த்தி சுரேஷ் என அறிமுகப்படுத்திக் கொண்டார். SIRI Enterprises என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ. 80,00,000- பணம் மாற்றுமாறு அவர் கூறி­னார். பின்னர் அந்த குறுஞ்செய்தி உண்மையென நம்பி, எந்தவித சரிபார்ப்பும் இன்றி அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு ரூ. 80,00,000 அனுப்­பினேன். பின்னர் பணம் அனுப்பியது தொடர்­பாக என்னுடைய நிறுவனத்தின் CEOயிடம் கேட்டபோது, அவர் தான் பணம் ஏதும் அனுப்பகோரி குறுஞ்செய்தி அனுப்பவில்லை என தெரி­வித்­தார், அப்­போ­துதான் நான் ஏமாற்­றப்­பட்­டது தெரி­ய­வந்­தது. அந்த நபர் மீது நட­வ­டிக்கை எடுத்து பணத்தை மீட்­டுத்­த­ர­வேண்டும் என்று அந்த புகாரில் கூறி­யி­ருந்தார்.

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமி­­ஷனர் ராதிகா மேற்­பார்­வையில், கூடுதல் துணைக்­க­மி­­ஷனர் கார்த்திகேயன் தலை­மையில் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், பிரணாதார்த்திஹரன் அனுப்­பிய பணம் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த முகமது அர்பாஸ் என்பவரின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கிற்கு ரூ. ரூ. 5,30,000 சென்­றதும் பின்னர் அந்த வங்கி கணக்கில் இருந்து ரூ. 5,30,000-த்தை செக் மூலம் வங்கியில் இருந்து எடுத்துள்­ளனர். அதே போல் மைசூரை சேர்ந்த ஹஷீர் அக்தர் என்பவரின் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி கணக்கிற்கு ரூ. 10,00,000- சென்றுள்ளதும், பின்னர் அந்த வங்கி கணக்கில் ரூ. 10,00,000 -த்தை செக் மூலம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதும் கண்டயறிப்பட்டது.

அதன்பேரில், சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 07.01.2026 அன்று மைசூர் மற்றும் பெங்களூரு சென்று இவ்வழக்கின் எதிரிகளான முகமது அர்பாஸ் (21), ஹஷீர் அக்தர் (21), ஆகிய இருவரும் நேற்று 09.01.2026 அன்­று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரிகளிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், எதிரி முகமது அர்பாஸுக்கு எதிராக தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3 புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்ட பணம் தனது வங்கி கணக்கில் பெற அனுமதித்து, கமிஷன் பெற்றுக் கொண்டு காசோலை மூலம் பணம் எடுக்க உதவியுள்ளார். இதன் மூலம் அவர் Mule வங்கி கணக்குகளை பயன்படுத்தி, மேன்-இன்-தி-மிடில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உதவி செய்துள்ளார்.

மேலும் ஹஷீர் அக்தர், தனது சேமிப்பு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளை ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்ட பணம் பெற பயன்படுத்த அனுமதித்ததுடன், பணம் எடுப்பதும், பரிமாற்றம் செய்வதும், போலி நிறுவனம் உருவாக்கி ம்யூல் கணக்குகள் திறப்பதும், அதற்காக கமிஷன் பெறுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு, சைபர் மோசடிக்கு அறிந்தே உதவி மற்றும் தூண்டுதல் செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (10.01.2026) சைதாப்பேட்டை, XIவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பொதுமக்கள் “அதிக லாபம் த்தரவாதம்” என கூறும் ஆன்லைன் முதலீட்டு குழுக்கள், போலியான வர்த்தக செயலிகள், புதியதாக வரும் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸஅப் எண்களிலிருந்து பணம் அனுப்புமாறு கோரினால், அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அறிமுகமில்லாத வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்புவதையோ, சரிபார்க்கப்படாத முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதையோ தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்து, உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும், அருகிலுள்ள சைபர் குற்ற காவல் நிலையத்தை அணுகவும் அல்லது விரைவான உதவிக்காக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை அழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

Comments (0)
Add Comment