தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை வளாகத்தில் மகபூப் சுப்ஹானி முஹ்யித் தீன் அப்துல் காதிர் ஆண்டகை மகானின் கந்தூரி விழா 13 நாட்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மஹ்லரா கமிட்டி தலைவர் வாவு காதர் சாஹிப், செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் முஹிய்யித்தீன் அப்துல் காதர் முன்னிலை வகித்தனர். தினசரி காலையில் கத்முல் குரான் ஓதுதலும், மாலையில் மகானின் புகழ் பாடுதலும் நடந்தன. தினசரி இரவில் சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது. மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் செய்யது அப்துர் ரகுமான், பேராசிரியர்கள் சுஐபு ரகுமான், முகம்மது இம்ரான், முகம்மது அஸ்ஹருத்தின், மன்னர் அப்துல்லாஹ், மௌலவி முஹம்மது அன்வரி, மௌலவி தவ்பீக் அஹ்மத் மிஸ்பாஹி, மௌலவி சூல்பிஹார் அலி மஹ்ழரி குத்பா பெரிய பள்ளி கதீபு அகமது அப்துல் காதிர், சென்னை புலியூர் ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம் முகம்மது உமர் ரிழ்வானுல்லாஹ், காஜா முஹிய்யித்தின், முஹம்மது அஸ்பர் அஸ்ரபி,பெரிய சம்சுதீன் ஜும்மா பள்ளிவாசல் கதீபு அபூமன்சூர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்.
நிறைவு நாளன்று மாலையில் செய்யது அப்துர் ரகுமான் ஆலிம் தலைமையில் மகானின் புகழ் பாடுதலும், கலீபா அப்துல் காதர் ஆலிம் தலைமையில் தியான வழிபாடும் நடந்தன. பின்னர் உலக மக்களின் நலனுக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பிதுரை, நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்பட திரளானோர் பங்கேற்றனர். இன்று காலையில் அனைவருக்கும் பொது நேர்ச்சை விநியோகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கந்தூரி விழா குழுவினர் செய்திருந்தனர்.