தங்க, வைர நகைகள் மோசடி செய்த தாய், மகன் கைது: 2 ஐபோன்கள், இரு­சக்­கர வாகனங்கள் பறி­மு­தல்

சென்­னை, வேப்பேரி பகுதியில் பெண்ணிடம் பழகி தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அபகரித்த வழக்கில் தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்­த­னர். ­அ­வர்­க­ளிடம் இருந்து 2 ஐபோன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்­யப்­பட்­ட­ன.

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண், கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 4வது தளத்தில் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா (53) என்பவர் திலீப் கீவசரா மற்றும் அங்கீத் ஆகிய 2 மகன்களுடன் வசித்து வந்­துள்ளார். இந்­நி­லையில் 35 வயது பெண், சங்கீதாவின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று சங்கீதா மற்றும் அவரது மகன்களுடன் பேசிப் பழகி­யுள்ளார். அப்போது, மகன் திலீப் சீவகரா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி அந்தப் பெண்ணுடன் பழகி வந்ததாகவும், பின்னர் திலீப் சீவகரா வருமான வரி செலுத்த வேண்டும், தொழிலுக்கு பணம் தேவை என அடிக்கடி பணம் கேட்டுள்ளார்.

அதன் பேரில் அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து சிறிது சிறிதாக ­மொத்தம் சுமார் 850 கிராம் தங்க நகைகள், 120 கிராம் வைர நகைகள் மற்றும் 2 ½ கிலோ வெள்ளி பொருட்களை கொடுத்துமொார். மேலும் திலீப் பணம் வேண்டும் என கேட்டபோது, அப்பெண் மொத்த நகைகளையும் கொடுத்து விட்டேன். தன்னிடம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். அப்போது, தலீப் ‘‘நீ பணம் தரவில்லை என்றால் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதாக‘‘ மிரட்டியுள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் வேப்பேரி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் பாரதி நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சங்கீதா (53), மற்றும் அவரது மகன் அங்கீத் (31) ஆகிய இருவ()யும் நேற்று (24.02.2026) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஐபோன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (24.02.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய தலைமறைவு எதிரியை காவல் குழுவினர் தேடிவருகின்றனர்.

Comments (0)
Add Comment