காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் மீலாது பெருவிழா

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் மீலாத் கமிட்டி சார்பாக மீலாது பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மவுலவி செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

முன்னிலை நிர்வாகிகளான ஹாஜி வாவு எஸ். காதர், ஜனாப் தாஜூத்தீன், ஸ்டார் அப்துல் காதர், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் பெருமானாரின் சிறப்புகள் மற்றும் மனிதநேயம் குறித்து மவ்லவி எஸ். பவ்ஜ் அப்துர் ரஹீம் பாகவி (அத்திக்கடை) சிறப்பு சொற்பொழிவாற்றினார். கேஎம்டி சுலைமான் தொகுப்புரையும், விடி சதக் தம்பி நன்றியுரையும் ஆற்றினார்கள். அஹ்மத் நெயினார் பள்ளியின் தலைவர் மவ்லவி கேஏ அஹ்மது அப்துல் காதிர் விழாவில் துஆ என்னும் பிரார்த்தனை நிகழ்த்தினார்.

உலகில் அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் நிலைத்திட துஆ வேண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள் செய்யது மீரான் முஜ்ஜம்மில், காயல் ஜெஸ்முதீன், காயல் முஹம்மத் ஷமீம் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வருகை புரிந்த அனைவருக்கும் தப்ரூக் என்னும் நேர்ச்சை இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மஹ்ழரத்துல் காதிரிய்யா மீலாத் கமிட்டியினர் சிறப்புடன் செய்தார்கள்.

Comments (0)
Add Comment