காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி துவங்கி வைத்தார்

காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாமை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையர் செந்தில் குமாரி துவங்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்சியாக சென்னை பெருநகர காவல், ஜியோ (GEO) இந்திய பவுண்டேஷன், அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் 32 டென்டல் கேர் ஆகியவை இணைந்து சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர், டாக்டர் P.K.செந்தில்குமாரி இன்று (24.02.2024) காலை, வேப்பரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில், கண் மற்றும் பல் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். இம்முகாமில் காவல் ஆணையரகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என சுமார் 216 நபர்கள் கலந்து கொண்டு பல் மற்றும் கண் தொடர்பான பரிசோதனை மேற்கொண்டு பயன் அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் ஸ்டாலின், கீதாஞ்சலி (சைபர் கிரைம்), ஜியோ (GEO) இந்திய பவுண்டேஷன், அகர்வால் கண் மருத்தவமனை மற்றும் 32 டென்டல் கேர் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment