ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர்கள் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.03.2023) மாலை, வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரோடு மற்றும் தியாகப்பா தெரு சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த 2 நபர்களிடம் அவர்கள் வைத்திருந்த பார்சலை சோதனை செய்தபோது,

அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் திருச்சூர் நிஷாத் (32), அலின் (35) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment