காயல்பட்டினம் மகான் நெய்னா முஹமது சாகிப் ஒலி­யுல்­லாஹ் கந்­தூரி விழா துவக்­கம்

காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளி ஜமாஅத் சார்பில் மகான் நெய்னா முகம்மது சாகிப் ஒலில்லாஹ்வின் 125-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கொடி ஊர்வலம் 3 தெருக்களில் நடந்தது. கந்தூரி ஊர்வலத்தில் பேண்டு வாத்தியங்களுடன், சிலம்பம், வாள் வீச்சு, மான் கொம்பு, தீபந்தம் சுற்று போன்ற வீர விளையாட்டுகள் நடை பெற்றது. கொடியேற்று நிகழ்ச்சியில் கோமான் ஜமாஅத் மற்றும் கந்தூரி கமிட்டியின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 15 நாட்கள் நடைபெறும்.

விழாவில் தினசரி காலையில் கத் முல் குரான் ஓதுதலும் மாலையில் மகானின் புகழ் மாலை பாடுதலும் இரவில் மார்க்க சொற்பொழிவும் நடக்கின்றன. நிறைவு விழா ஜூலை 10ம் தேதி நடக்கிறது.

Comments (0)
Add Comment