கக்கன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நாளை 25.07.2023 அன்று காலை 9 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது.
இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ட்ரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிடுகிறார். சங்கர் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஜோசப் பேபி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமை தாங்கும் இந்த விழாவில் கக்கனின் ஒரே மகள் கஸ்தூரி மற்றும் கக்கனின் பேத்தியும் தமிழக காவல்துறை சேலம் சரக டிஐஜியுமான ராஜேஸ்வரி ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்குகிறார்.