இன்று 12ம் வகுப்பு பெொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக நீதிபதி முகமது ஜியாவுதீன் தெரிவித்துள்ளதாவது:–
”அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய அனைவருக்கும் வணக்கம். இன்று 01.03.2024 அன்று 12 ஆம் வகுப்பு (+2) பொதுத்தேர்வு தொடங்குகிறது. 22.03.2024 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. பதினொன்றாம்(+1) வகுப்பு பொதுத்தேர்வு 04.03.2024 தொடங்கி 25.03.2024 வரை நடைபெற உள்ளன. நமது வீட்டிலும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேர்வு எழுதுகிற மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்களையும் நம்பிக்கையையும் பகிர்வோம். அதே நேரத்தில் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கப் போவதில்லை என்ற கருத்தையும், ஒழுக்கமும் நல்ல பண்பும், நம்பிக்கையும் தான் இறுதிவரை கூட வரும் என்ற கருத்தையும் குழந்தைகள் மத்தியில் விதைக்க வேண்டும். பொதுத்தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று எதிர்காலத்தில் சிறப்புப் பெற்று நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் வெற்றி பெற இந்த நல்ல தருணத்தில் வாழ்த்துவோம்.
அன்புடன்
அ. முகமது ஜியாவுதீன்