ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நடந்த இந்த “ட்ரையத்லான்” நிகழ்ச்சியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.