இளம் நடிகரை 2வதாக மணக்கிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் ஜோடி தங்களுடைய விவாகரத்து குறித்து கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டனர். இந்த பிரிவுக்கு பின் இருவரும் தனித்தே இருக்கின்றனர். என்னதான் பிரிந்து விட்டாலும், தங்களுடைய குழந்தைகளை நல்லபடியாக கவனித்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகர் ஒருவரை 2வதாக திருமணம் செய்ய உள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகின. அவர் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், இதுகுறித்து புதிதாக வெளியாகியுள்ள தகவலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்யப்போவது இல்லையாம். மேலும் அவர் இளம் நடிகரை காதலிப்பதாக சொல்லும் செய்தியும் பொய் என கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment