வருகிறது ஐபிஎஸ் டிரான்ஸ்பர்

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடக்கவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மாதம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டார். அவரையடுத்து சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி அதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். நேற்று திருச்சியில் வாக்குச்சாவடிகள் முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் பணியும் நடந்து வருவதாக தெரிகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாற்றும் பட்டியலும் தயாராகி வருகிறதாம்.

கோவை டிஐஜி, சென்னை நகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் பதவிகள் காலியாக உள்ளன. அதிலும் பதவி நிரப்பப்பட வேண்டும் என்பதால் அதற்குறிய போஸ்டிங்குகளும் வெளிவரவுள்ளன. நாளை சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளின் டிரான்ஸ்பர் விவரம் வெளியாகவுள்ளது என கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன. எந்தந்த பதவிக்கு யார் யார் அமர்த்தப்படுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்புடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 

Comments (0)
Add Comment