தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் 2008-ல் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. மே 28-ந் தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.

Comments (0)
Add Comment