ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுதும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் 26.06.2025ம் தேதி வியாழன் கிழமை அன்று காலை 06.00 மணிக்கு தமிழ்நாடு போலீஸ் கன்வென்சன் சென்டர், ஆவடியில் தொடங்கி அதே இடத்தில் முடிக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான அறிமுக நிகழ்ச்சி இன்று (19.06.2025) ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் ஆவடி, தமிழ்நாடு போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் சங்கர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் பந்தயத்திற்கான போஸ்டரை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் பவானீஸ்வரி,காவல் துணை ஆணையாளர்கள் மகேஷ்வரன், ஐமன் ஜமால் மற்றும் 58 கல்லூரிகளை சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெறும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் இருபாலர்களுக்கும் தனித்தனியே முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.3000 மற்றும் 50 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். வீரர்கள் போட்டியில் நுழைவு கட்டணம் ஏதும் இன்றி போட்டி நடைபெறும் அன்று 26.06.2025 ம் காலை பதிவு செய்து கொள்ளலாம் என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.