சிறந்த காவல் பணிக்கான நட்சத்திர விருதினை சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜாராணிக்கும், நட்சத்திர காலாண்டு விருதை அமைச்சுப்பணி உதவியாளர்அனீஷ்குமாருக்கும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல்துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு ஒவ்வொரு மாதமும் “நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுத்து ரூ. 5 ஆயிரம் பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ‘நவம்பர் -2023’ மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் காவல் ஆய்வாளர் ஷீஜாராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ்கள், மற்றும் வேலை செய்தது போன்ற போலி பணி அனுபவ சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ருஸ்கேஷ் ரெட்டி, திவாகர் ரெட்டி மற்றும் சென்னையைச் சேர்ந்த முகமதுரியாஸ், மகேஸ்வரன், ஆகிய 4 நபர்களை ஆய்வாளர் ஷீஜாராணி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து 500க்கும் மேற்பட்ட போலி கல்வி சான்றிதழ்கள் மற்றும் கணினி உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.