எஸ்ஆர்எம் ராமாபுரம் கல்லூரி மேலாண்மை துறையில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மேலாண்மை பீடத்தில், பிபிஏ மற்றும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக விழா நடைபெற்றது.

எஸ் ஆர் எம் மேலாண்மை பீடத்தின் முதல்வர் முனைவர் பிரவீன் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு  விருந்தினராக மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் ஐஏஎஸ் அதிகாரி கலந்து கொண்டார். அவர் தனது தொடக்க உரையில், உலகளாவிய பார்வை மற்றும் திட்டமிடல் திறன்கள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு முக்கியமான பண்புகள் ஆகும் என்றார். மேலும் அவர் பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசியது அனைவரையும் கவர்ந்தது. மாணவர்கள் அரசியல் அறிவையும் சமூக அறிவையும் பெற்று விளங்க வேண்டியதன் அவசியத்தை குறித்து அடிக்கோடிட்டு பேசினார்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்தியா சிமெண்ட்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் தலைவர் கே. சுரேஷ் பேசுகையில், நெறிமுறை சார்ந்த தலைமையும், மூலதன சந்தைகளில் நடந்துவரும் டிஜிட்டல் மாற்றமும் எவ்வாறு நாளைய தொழில்துறை தலைவர்களை உருவாக்கும் என்பதை அழுத்தமாக விளக்கினார். எஸ்ஆர்எம் கல்வி குழும நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இயக்குனர் கதிரவன் தலைமை உரையாற்றி புதிய மாணவர்களை வரவேற்றார்.

இந்த நிகழ்வை முதுகலை மேலாண்மை துறை தலைவர், இளங்கலை மேலாண்மைத் துறை தலைவர் மற்றும் துறை ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தனர். இந்த விழா எஸ் ஆர் எம் குழும நிறுவனங்கள், சென்னை ராமாபுரம் மற்றும் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார், மற்றும் இணைத் தலைவர் எஸ். நிரஞ்சன், கல்வித்துறை சார்ந்த நோக்கங்களான நீடித்த வளர்ச்சி மற்றும் திறன் சார்ந்த வளர்ச்சியை அடைவதற்கான தன்னம்பிக்கை பார்வையை கொண்டு நடந்த நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் பல்வேறு தலைமை பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments (0)
Add Comment