கோவையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகம் வெளியீட்டு விழா

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய எனக்கு இன்னொரு முகம் இருக்கு புத்தகம் வெளியீட்டு கோவையில் இன்று நடந்தது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி ஷ்வேதா சுப்பையா பாலகிருஷ்ணன் மற்றும் அத்ருத் சுப்பையா ஆகியோர் இணைந்து எழுதிய ‘‘FASCINATING FLAGS FOR FUN’’ என்ற நூல்களின் வெளியீட்டு விழாவும் நடந்தது. புத்தகத்தின் முதல் பதிப்பை கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

மேலும் பாலகிருஷ்ணனின் மனைவி திருமதி ஸ்வேதா பாலகிருஷ்ணன் மற்றும் மகன் அத்ருத் பாலகிருஷ்ணன் சேர்ந்து எழுதிய ‘‘FASCINATING FLAGS FOR FUN’’ நூலின் முதல் பிரதியை முன்னாள் வருமானவரித்துறை அதிகாரி மோகன் அலங்காமணி, சித்ராபாலா மோகன் ஆகியோர் வெளியிட எஸ்எஸ்வி கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் அறிமுக உரையை சிந்தனைக் கவிஞரும், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநருமான கோவை கவிதாசன், சென்னை, ஸீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் ராம்ஜி நரசிம்மன் ஆகியோர் வழங்கினர். மேலும் கமிஷனர் பாலகிருஷ்ணனின் பெற்றோர் வேலய்யா மற்றும் திருமதி தங்கதனபதி வேலையா ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்கினர். கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். விஜயா பதிப்பகத்தின் இயக்குநர் வேலாயுதம் நன்றியுரை வழங்க நிகழ்ச்சிகளை கவிஞர் அன்புசிவா தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் சென்னை மற்றும் கோவையில் இருந்து ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

 

Comments (0)
Add Comment