மேலப்­பா­ளை­யம் ரிபாஈ ஆண்­ட­வர்கள் தர்­கா ஷரீப் தலைமை பீடத்தில் பெரிய ராத்­திபு திக்ர் மஜ்லிஸ் கந்­தூரி விழா

நெல்லை, மேலப்­பா­ளையம் சுல்த்தான் செய்­யது அஹ்­மது கபீர் ரிபாஈ ஆண்­டவர்கள் தர்கா ஷரீப்பில் வரு­டாந்­திர கந்­தூரி விழா வெகு விம­ரி­சை­யாக நடந்­தது.

நெல்லை மேலப்­பா­ளையம், வெள்ளை கலீபா தெரு, ரிபா­ஈ ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப்பில் நபிகள் நாய­கத்தின் திருப்­பேரர் சுல்த்­தானுல் ஆரிபீன் அஸ்சுல்த்தான் செய்யது அஹ்மத் கபீர் ரிபாஈ ஆண்­ட­வர்கள் (ரழி) வரு­டா­ந்­திர பெரிய ராத்­திபு திக்ர் மஜ்லிஸ் கந்­தூரி விழா தாயிரா டங்கா, தப்ஸ் முழக்­கங்­க­ளுடன் வெகு விம­ரி­சை­யாக நடை­பெற்ற­து.

­க­டந்த 24.11.2024 அன்­று இரவு 9.30 மணிக்கு தொடங்கி அதி­காலை 4 மணி வரை நடந்த இந்த ஆன்­மிக நிகழ்வில் அல்­லாஹ்வைப் புகழும் திக்ர், ஹதீஸ், ரிபாஈ ஆண்­ட­வர்­களின் சரி­தைகள், தரீ­க்­காவின் மகத்­து­வங்கள், ரிபா­ஈ நாய­கத்தின் மீது அன்பு வைக்கும் உறுதி­ மொ­ழிகள், மெஞ்­­ஞான ரக­சிய போத­னைகள், சொற்­பொ­ழிவுகள் மற்றும் ரிபாஈ பக்­கீர்­களின் காதிரிய்யா நிகழ்ச்­சியும் நடை­பெற்­ற­து. முன்­ன­தாக வெள்ளை கலீபா முஹம்­மது கவ்து வலி­­யுல்­லாஹ்வின் அடக்­கதலத்தில் சந்­தனம் பூசப்­பட்­டது.

மேலப்­பா­ளையம் ரிபாஈ தரீக்­காவின் தலைவர் ஹாஜி வெள்ளை கலீபா அமீர் ஹம்ஸா சாஹிப் செய்­யிது கவ்­துல்­லா­ஷா ரிபாஈ தலை­மையில் நடந்த இந்த கந்­தூரி நிகழ்ச்­சியில் மேலப்­பா­ளையம் சர் கலீபா செய்­யது ஹிதா­யத்­துல்­லாஷா ரிபாஈ அஹ்­ம­தி­யத்­துல் காதிரி மற்றும்              கலீ­பாக்கள் தாவூ­தலி குலாம் அஹ்­மது செய்­ய­து நூருல்­லாஷா ரிபா­ஈ அஹ்­­ம­தி­யத்துல் காதிரி, முஹ­ம்மது யூனுஸ் ஷாதுலி செய்­யது அன்­வா­ருல்­லாஷா ரிபாஈ அஹ்­ம­தி­யத்துல் காதிரி மற்­றும் புகரா­க்கள் உள்­பட ஏரா­ள­மான பொது­மக்கள் கலந்து கொண்­ட­னர். இறு­தியில் ஸலாம் பைத்­ ஓதி நேர்ச்சை வழங்கி நிகழ்ச்சி முடி­வுற்­ற­து.

 

Comments (0)
Add Comment