சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 9 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், DARE (Drive against Rowdy Element) மற்றும் DACO (Drive against Crime Offenders) போன்ற பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2023 முதல் 18.08.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 246 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 61 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 47 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, பாலியல் தொழில் நடத்திய 8 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 2 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 366 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 12.08.2023 முதல் 18.08.2023 வரையிலான ஒரு வாரத்தில் 9 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் மீது தாம்பரம் காவல் நிலையத்திலும், கஞ்சா குற்றவாளிகள் தீனதாயளன், 40, வெங்கடேசன், 38, ஆகிய இருவரும் கடந்த 10.07.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக யானைக்கவுனி காவல் நிலையத்திலும், மணிகண்டன் (எ) புளிமூட்டை மணிகண்டன் 27, கத்தியால் தாக்கி ரகளையில் ஈடுபட்டதற்காக G-2 பெரியமேடு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், பிரியாவிஷா, 44, வேளச்சேரி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பதாக கூறி, பண மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவிலும் (EDF).6.சுரேஷ்குமார் (எ) அந்தமான், வ/25, தைாதாப்பேட்டை என்பவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக, சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும், ஆறுமுகம், வ/37, த/பெ.சந்திரன், மஸ்தான் கோயில் தர்கா, இராயபுரம், 8.ராகுல் (எ) சஞ்சய் ராகுல், வ/23, த/பெ.கோபிநாத், புன்னாங்கிபுரம் 1வது தெரு, நுங்கம்பாக்கம் ஆகிய இருவரும் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும், 9.கோகுல், வ/23, த/பெ.பாலமுருகன், கன்னிகாபுரம் 2வது தெரு, கே.கே.நகர் என்பவர் கத்தியால் தாக்கி ரகளையில் ஈடுபட்டதற்காக R-7 கே.கே.நகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ஜெகதீஷ், தீனதாயளன், வெங்கடேசன், மணிகண்டன் (எ) புளிமூட்டை மணிகண்டன் ஆகியோரை கடந்த 16.08.2023 அன்றும், பிரியாவிஷா, சுரேஷ்குமார் (எ)அந்தமான், ஆறுமுகம், ராகுல் (எ) சஞ்சய் ராகுல் ஆகியோரை 17.08.2023 அன்றும், கோகுல் என்பவரை நேற்றும் (18.08.2023) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 9 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.